‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய டிரெய்லர்

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.

இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் திகதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.