கிரிக்கெட்டில் வாங்கும் சம்பளத்தைவிட விளம்பரத்தில் கோடிகணக்கில் சம்பாதிக்கும் விராட் கோலி!

பெரும்பாலும் பிரபலங்கள் என்றாலே அவர்கள் சம்பாதிக்கும் சம்பளம் கோடிக்கணக்கில் தான் இருக்கும். அதில் பெரும் தொகையை இந்தியாவில் நடிகர், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், உயர் அதிகாரிகள் தான் பெருமளவில் சம்பாதிக்கின்றனர். இதில் விளையாட்டு வீரர்களில் கிரிக்கெட் வீரர்கள் தான் அதிகளவில் சம்பாதிக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருட சம்பளமாக அனைவரையின் தகுதியை வைத்துதான் சம்பளம் கிடைக்கும். அந்த வகையில் 2018-2019 கணக்காண்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 7 கோடி சம்பளமாக பிசிசிஐயிடன்மிருந்து வாங்குகிறார். ஆனால் இந்த சம்பளத்தை தவிர்த்து விராட் பல கோடிகள் சம்பாதிக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.

அதாவது விராட் அவரது டிவிட்டர், இண்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர இணையதள சமுகவலைத்தளத்தில் அவர் பெயரில் இருக்கும் கணக்கில் அவர் பதிவிடும் புகைப்படமோ, தகவலோ, விளம்பரமோ எவ்வளவு எண்ணிக்கையில் ஷேர் செய்யப்படுகிறதோ அதற்கேற்ப அவரின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

அதில் இவரது ஒரு நிமிட வீடியோவில் அவர் எந்த பொருளை காட்டி வீடியோ பதிவிடுகிறாரோ அதைவைத்து அந்த விளம்பர நிறுவனம் சம்பளத்தினை கொடுக்குமாம்.

இதில் விராட் சுனார் 100 கோடிக்கு மேல் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள், பிசிசிஐ பட்டியலில் பெற்றிருக்கும் இடத்தினை பொருத்து அவர்களது சம்பளம் கொடுக்கப்படும்.