கோத்தபாய 83 ஆயிரம் வாக்குகளிற்கு மேல் முன்னிலையில்

தற்போது வரை கிடைத்துள்ள தபால் மூல வாக்களிப்புக்கான முடிவில் பொதுஜன பெரமுனாவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ 83 ஆயிரம் வாக்குகளிற்கு மேல் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 83979 வாக்குகள் முன்னிலையில் கோத்தபாய உள்ளமை தெரியவந்துள்ளது.

இம் ஆரம்ப நிலையைப் பார்க்குமிடத்து சஜித் பிரேமதாசவிற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் 16 சத வீத முடிவுகளின் அடிப்படையிலே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.