இளம்பெண்ணை 5 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.!

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக இப்பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு சென்றுள்ளார். வேலை விஷயமாக நண்பர் ஒருவரை காண சென்ற நிலையில்., இவர் சந்திக்க சென்ற நபரே இவரை புதருக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்..

இதனால் பதறிப்போன பெண்மணி அறவே., இவரின் அலறல் கேட்ட வாலிபர்கள் இருவர் பெண்ணை காப்பாற்றியுள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து தனது நண்பர்களுடன் கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தெரிவித்ததாவது.,

பெண் பணியின் காரணமாக கடந்த புதன்கிழமையன்று இரவு நேரத்தில் ரவி என்பவரை சந்திக்க அங்குள்ள பூங்காவிற்கு சென்ற நிலையில்., ரவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இந்த சமயத்தில் பெண்ணின் அலறலை கேட்ட இரண்டு வாலிபர்கள்., ரவியிடம் இருந்து பெண்ணை மீட்டு., தனது மூன்று நண்பர்களை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்., காயமடைந்து இருந்த பெண்ணை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்து., ரவியை கைது செய்தோம். ரவியிடம் மேற்கொண்ட விசாரணையில் கிஷோர்., ப்ரீத்தம் மற்றும் உமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம்.

இந்த வழக்கில் தொடர்புடைய குட்டு மற்றும் ஷம்பு என்ற இரண்டு பேரை தேடி வருவதாகவும்., இவர்கள் அணைவியாரும் பூங்காவினை சுற்றியுள்ள பகுதியை சார்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. தற்போது கூட்டுப்பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.