லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிய நட்சத்திர ஜோடி!

பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திர ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன். முக்கிய பிரபலங்கள் இவர்கள் காதல் திருமணம் செய்து வாழ்க்கையில் இணைந்தார்கள்.

கடந்த வருடம் இதே நவம்பர் 14 ல் இத்தாலியில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இன்று இவர்களின் முதல் வருட திருமண நாள் நிறைவு.

இதற்காக இருவரும் குடும்பத்தாருடன் திருப்பதிக்கு தனி விமானம் மூலம் வந்து புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கோவிலின் வாசலில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட அதை 28 லட்சம் பேர் பார்த்ததோடு திருமண நாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.