சங்கத்தமிழனுக்கு நேர்ந்த சங்கடம்! படத்திற்கு தடை!

விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் சங்கத்தமிழன். அவரின் படங்களுக்கே உரிய எதிர்பார்ப்புக்கிடையில் இப்படம் வெளியாகவுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் நிவேதா பெத்துராஜ், ராஸி கண்ணா, அனன்யா, சூரி, நாசர், மைம் கோபி, ஸ்ரீமன், கல்லூரி வினோத், கயல் தேவராஜ், நிகழ்ச்சி தொகுப்பாளின் ரம்யா என பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு அண்மைகாலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில் சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாநகர பகுதியில் திரையிட திருநெல்வேலி முதலாவது உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.