கிளிநொச்சி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் ஒருவர் பலி.

 கிளிநொச்சியில் இன்று பிற்பகல் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளியில் பயணித்த அவர் எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் இவர் விபத்துக்குள்ளானார்.

பரந்தனைச் சேர்ந்த 34 வயதுடைய இ.சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தார். இவர் திருமணமானவர்.

பரந்தனில் இருந்து சந்திரகுமார் உந்துருளியில் முறிப்பில் உள்ள தனது சகோதரியின் வீட்டை நோக்கிப் பயணமானார்.

முறிப்பில் உள்ள பாடசாலைக்கு முன்பாக அவர் விபத்தில் சிக்கினார். எதிரே வந்த சிறிய ரகக் கன்ரர் வாகனம் ஒன்று மோதி விபத்து நடந்தது. விபத்து பிற்பகல் 1.30 மணியளவில் நடந்தது.

விபத்தில் சிக்கிய சந்திரகுமாரின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது. அவரது உடல் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறிய ரகக் கன்ரர் வாகனத்தைச் செலுத்தி வந்தவர் கிளிநொச்சிக் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கிளிநொச்சிக் காவல்துறையினர் விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.