இன்றைய ராசிபலன் (11.11.2019)

ஸ்ரீ விகாரி ஆண்டு – ஐப்பசி 25 – திங்கட்கிழமை (11.11.2019)
நட்சத்திரம் : அஸ்வினி இரவு 8.49 வரை பின்னர் பரணி
திதி : சதுர்தசி இரவு 7.08 வரை பின்னர் பௌர்ணமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 3.00 – 4.00

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, நண்பர்கள் வழியில் பல நன்மைகள் கிடைக்கும். கோப தாபங்களை நெருங்கியவர்களிடம் காட்ட வேண்டாம். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். புது தொழில் தொடங்கும் வாய்ப்பு கிட்டும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, உங்களது பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். புது வாகனம் யோகம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் நல்ல பலம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய காரியங்கள் நடக்கும். வரும் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிகளை காண்பீர்கள். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். உத்யோகத்தில் சகஜ நிலை காணப்படும்.

கடக ராசி
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தொழில் வகையில் சில பண விரயம் ஏற்படும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப மகிழ்ச்சியான தருணங்கள் நிறையவே இருக்கும். வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். விஐபிகளின் தொடர்பால் முக்கிய காரியங்கள் எளிதில் கைகூடும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் வாழ்க்கையில் தரத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறகும்.

தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விருப்பமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் விரிவடையும்.

மகர ராசி
மகர ராசி அன்பர்களே, ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு மன அமைதியை தரும். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களே, விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொருளாதார நிலை உயரும். புது வீடு மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மீன ராசி
மீன ராசி அன்பர்களே, குடும்பத்தாரின் தேவைக்காக அதிக நேரம் செலவிட நேரிடும். உங்களுடைய மனமும், உடலும் புத்துணர்வுடன் செயல்படும். புது நபர்களிடம் கவனமாக பேசி பழகவும். உத்யோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு பெருகும்.