தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-வங்காளதேசம் பலப்பரிட்சை.!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 154 ரன்கள் 8 விக்கெட் பங்களாதேஷ் அணியை வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து இந்த தொடர் டி20 கிரிக்கெட் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதையடுத்து,, இந்தியா மற்றும் வங்கதேச இவ்விரு அணிகளுக்கு இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்றிரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

அதுபோல வங்கதேச அணியும் தொடரை கைப்பற்றுவதற்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

இதனால், நாக்பூரில்நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நாக்பூரில் மைதானத்தில் இதுவரை 11 இருபது ஓவர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 8 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய அணி ஆடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.