சத்தான கம்பு களி செய்வது எப்படி??

சிறுதானியம் வகைகளில் ஒன்றான கம்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இங்கு சத்து நிறைந்த கம்பு களி எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கம்பு – 1 டம்ளர்,
உப்பு – தேவையான அளவு ,
மோர் – 1 டம்ளர்

செய்முறை : 

கம்பை உமி நீக்கி புடைத்து ரவை போல இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1 டம்ளர் கம்புக்கு 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பிறகு கம்பு, ஒரு டம்ளர் மோர், உப்பு சேர்த்து களி போல் வரும் வரை கிண்டவும். சுவையான கம்பு களி தயார்.

இதற்கு தக்காளிச் சட்னி நன்றாக இருக்கும்.