இந்த வார ராசிபலன்… எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா?

வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்டி இருக்கும் என்று உங்களுக்கு வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். இந்த வாரம் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

இந்த வாரம் நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவேண்டியது அவசியமாகும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு இந்த வாரம் எதிர்பார்த்த அளவு இருக்கக்கூடும். பொழுதுபோக்குவதற்கு உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் எதிர்கால திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தடைகள் ஏற்படக்கூடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடும். இது உங்களின் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும். அதற்காக நீங்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். அலுவலக பணியாளர்களுக்கு இந்த வாரம் அருமையாக இருக்கக்கூடும். கூடுதல் வேலைப் பளு ஏற்படும். உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் கடின உழைப்பை பாராட்டுவார்கள். இந்த வாரம் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் நிலைமை வார இறுதியில் சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நாள் : வெள்ளிக் கிழமை

ரிஷபம்

கடந்த வாரம் உங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள், இந்த வாரம் வெற்றியாக மாறக்கூடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான நேரம் கூடி வரும். நல்ல தகவல்கள் உங்கள் வீடு தேடி வரும் நேரம் இது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். அதிக லாபம் பெறலாம். அலுவலக பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், உங்கள் கடின உழைப்பால் அவற்றை எளிதாக முடிப்பீர்கள். பொருளாதார வசதி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவும் உங்களை தேடி வரும். பணப்பிரச்சனை விலகிப்போகும். ஆனால், கடன் கொடுப்பதை தவிர்க்கப்பாருங்கள். புதிய திட்டங்களில் முதலீடு செய்ய அருமையான காலம் இது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக கழியும். வீட்டிலும் அமைதியான சூழல் நிலவும் காலம். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும். அவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மனைவியுடன் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்ள நேரிடலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் தனியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிட்டும். வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வெளியிடங்களுக்கு சென்றால் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

மிதுனம்

உங்களுடைய கடினமான பொறுப்புகள் உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுக்கும். அலுவலக வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் இரண்டையும் சரிசமமாக பாவிப்பதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்காது. பணியாளர்களுக்கு அலுவலகத்தில் நிலைமை சாதாகமாக இருக்காது. உங்கள் உயரதிகாரி உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். சிறிய அளவில் கவனக்குறைவுடன் செயல்பட்டாலும், அது உங்களை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். எனவே உங்கள் வேலையில் முழு கவனத்துடனும் நேர்மையுடனும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் வர்த்தகர்களுக்கு வியாபாரம் சூடுபிடிக்கும். இதனால் பரபரப்புடன் செயல்படுவீர்கள். சமீபத்தில் ஆரம்பித்த புதிய வர்ததக ஒப்பந்தத்தால் அதிக லாபம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த வார தொடக்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களக்கு கிடைக்காது. ஆனால் வார இறுதியில் நிலைமை சரியாகிவிடும். உங்களின் கடின உழைப்புக்கு வெற்றி உங்களை தேடிவரும். கூட்டு வாணிகம் அதிக லாபத்தை கொடுக்கும். மனைவியிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது. நிலைமை சரியாகும் வரை பொறுமையை கடைபிடிக்கவும். வேலையையும், உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது அவசியமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நாள் : வியாழக் கிழமை

கடகம்

இந்த வாரம் மிகவும் கவனமாக சிந்தித்து பிறகு முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியம். உங்கள் எதிரிகள் உங்களை வீழ்த்துவதற்கு காத்திருக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தால், நீங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடலாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எவ்வளவு தான் கடினமாக முயற்சி எடுத்தாலும் கடைசியில் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை என்பதை உணர்ந்து கவலை கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடிவரும். அதுவரை பொறுமையாக இருங்கள். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடும். தற்போது பார்த்துவரும் வேலையில் உங்களுக்கு திருப்தி ஏற்படாவிட்டால், வேறு வேலைக்கு தீவிரமாக முயற்சித்தால் பலன் கிடைக்கும் வாரம். பொருளாதார நிலை மந்தமாகவே இருந்து வரும். முன்பு செய்திருந்த முதலீடுகள் லாபம் தராமல் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் காலம் இது. மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு எதிலும் முதலீடு செய்வதை தவிர்க்கப் பாருங்கள். இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நாள் : திங்கள் கிழமை

சிம்மம்

இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும். அலுவலகப் பணியை விரும்பி ஏற்றுக்கொள்வீர்கள். இந்த வாரம் அவசியமில்லாத பயணத்தை தவிர்க்கப் பாருங்கள். இது உங்களின் நேரத்தை வீணடிக்கக்கூடும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் இல்லத்தரசியுடன் சிறிது நேரத்தை செலவிட முடியும். இந்த வாரம் எதிர்பாராத பணவரவுகளை எதிர்பார்க்கலாம். இது உங்களின் நிதிச் சிக்கல்களை குறைக்கக்கூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். எந்தவிதமான கிசுகிசுக்களிலும் ஈடுபடவேண்டாம். மூதாதையர் சொத்துப் பிரச்சனையில் உங்களுக்கு பாதகமான செய்தி கிட்டும். இது உங்களின் குடும்பத்தில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும். இதனால் குடும்பத்தில் சலசலப்பு கூடும். இது உங்களின் மன நிம்மதியை கெடுக்கக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து நிலைமையை கையாளவும். அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். உங்களின் பிரச்சனைகளை வீட்டுப் பெரியவர்களிடன் விவாதியுங்கள். அவர்கள் உங்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேவையற்றி பேச்சுக்களை தவிர்க்கப்பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 16

சாதகமான நாள் : சனிக்கிழமை

கன்னி

இந்த வாரம் நீங்கள் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் தீர்க்க முயற்சிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக நடந்துகொள்வார்கள். பெற்றோரின் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் உங்களின் திறமையை மெச்சி உங்கிள் உயரதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை உங்களிடம் வழங்கலாம். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். முகத்தில் புத்துணர்ச்சி மலரும் வாரம் இது. பொருளாதார நிலைமை ஏற்ற இறக்கமாக இருக்கக்கூடும். ஆனாலும் அலட்டிக்கொள்ளவேண்டாம். இல்லத்தரசியுடன் கருத்து மோதல்கள் அதிகமாக இருக்கும். இது உங்களின் மன நிம்மதியை கெடுக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நாள் : வியாழக்கிழமை

துலாம்

இந்த வாரம் கவலை ரேகை உங்கள் முகத்தில் ஒடும். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். கூடுமானவரை அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பொருளாதார நிலைமை ஏற்ற இறக்கமாக இருக்கக்கூடும். முக்கிய பணிகளை முடிக்க கடன் வாங்க நேரிடும். இருந்தாலும் வார மத்தியில் நிதி நிலைமை சரியாகக்கூடும். அப்போது உங்களுக்கு கூடுதல் பணவரவு கிடைக்கலாம். எதிர்பாராத பணவரவும் உங்களுக்க கிடைக்கும். இருந்தாலும் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்காது. உங்களின் சூழ்நிலையை நன்கு உணர்ந்து உங்களின் இல்லத்தரசி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். அவரின் அன்பு உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதனால் உங்களின் கடின வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை காட்டவேண்டியது அவசியம். இது அவர்களுக்கு தெம்பை தரும். ஒரே சமயத்தில் பல்வேறு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதால் உடல் ஆரோக்கியம் கெடும். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நாள் : ஞாயிற்றுக்கிழமை

விருச்சிகம்

இந்த வாரம் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைக்க வேண்டியது அவசியம். வேலை விஷயத்தில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டிய காலம். இல்லாவிட்டால் பல்வேறு விமர்சனங்களையும் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். பணப்பரிவர்த்தனைகளில் அதிக கவனம் தேவை. பணப்பிரச்சனையில் சுயமாக முடிவெடுங்கள். மற்றவர்களை நம்பி எதிலும் முதலீடு செய்யவேண்டாம். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்தால் நீங்கள் கடும் இழப்பை சந்திக்க நேரிடும். மூதாதையர் சொத்து தொடர்பான வில்லங்கங்கள் தீர்க்கப்படும். இது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். குடும்பத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளை அவர்கள் ஆதரிக்கக்கூடும். இல்வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களே மிஞ்சும். அலுவலக வேலை காரணமாக இல்லத்தரசியுடன் செலவிட நேரம் கிடைக்காது. இருந்தாலும் உங்கள் மனைவி உங்களை புரிந்து நடந்து கொள்வதால், பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது. உடல் நலம் சீராக இருந்து வரும் வாரமிது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நாள் : செவ்வாய்க்கிழமை

தனுசு

வேலை தேடுவோருக்கு இந்த வாரம் இனிய செய்திகள் வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களின் கடந்த கால கடின உழைப்புக்கு உரிய பலன் உங்களை தேடிவரும். இதனால் உங்களின் எதிர்கால திட்டம் குறித்த கனவு நிறைவேறும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே மிஞ்சம். வர்த்தகத்தை விரிவு படுத்த நினைத்தால், அந்த திட்டத்தை தள்ளிப்போடவும். இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. உரிய நேரம் வரும் வரை காத்திருங்கள். இந்த வாரம் பணவரவு கூடும். உபரி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். கூடுதல் ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும். இதனால் உங்களின் நிதித் திட்டத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம். திருமணமான தம்பதிகளுக்கு உகந்த நேரம் இல்லை. இல்லத்தரசியின் உடல் நலம் குறைந்து வருவது உங்களை கவலைப்படச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் உங்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும். இது உங்களின் இல்லத்தரசியுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 35

சாதகமான நாள் : திங்கள்கிழமை

மகரம்

இந்த வாரம் நீங்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இதனால் நீங்கள் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகும். மன அமைதி பாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படக்கூடும். பெற்றோருடன் உறவு சீராக இருந்து வரும். புதுமணத் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் குழந்தைகளின் மூலம் புதிய பிரச்சனை முளைக்கக்கூடும். அவர்களின் கவனக்குறைவான போக்கு உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். எனவே அவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலைப் பளு இருக்கக்கூடும். உங்களின் உயரதிகாரி உங்களின் நடவடிக்கைகளை கண்கானிக்கக்கூடும். உங்களின் வேலையை குறை சொல்ல நேரலாம். எனவே வேலையில் கவனம் தேவை. இந்த வாரம் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யவேண்டிய காலம் இது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நாள் : வெள்ளிக்கிழமை

கும்பம்

இந்த வாரம் காதலர்களுக்கு இனிமையான வாரமாக அமையக்கூடும். ஆனால், உங்கள் காதலை சொல்ல நினைத்திருந்தால், அதை கொஞ்சம் ஒத்தி வைப்பது நல்லது. காரணம் முதலில் உங்கள் காதலியின் மனதை அறிந்துகொண்டு பிறகு சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும், புதுமணத் தம்பதிகள் இந்த வாரம் இனிமையாக பொழுதைக் கழிக்கலாம். அதிக நேரம் உங்கள் மனைவியுடன் பொழுதைக் கழிக்க முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும் வாரம். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையும் அன்பும் நிலைத்திருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். வார இறுதி நாட்களில் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் சென்று வரலாம். அலுவலக பணியாளர்களுக்கு இந்த வாரம் வழக்கம் போல சாதாரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிலுவை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் வேலைப்பளு ஏற்படும். உடல் நலனை சீராக வைத்திருக்க தியானம் மற்றும் யோகா செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 25

சாதகமான நாள் : சனிக்கிழமை

மீனம்

இந்த வாரம் மாணவர்களுக்கு உகந்ததாக இருக்கும். உயர் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இது ஏற்ற வாரமாக அமையக்கூடும். அனைத்து அம்சங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். அலுவலகப் பணியில் முன்பு செய்த குளறுபடிகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இருந்தாலும் நீங்கள் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கக்கூடும். நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டியது அவசியம். பணவரவு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பொருளாதார வசதி மேம்படும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க கூடுதலாக வேலை செய்ய வேண்டியது அவசியம். இல்வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். இல்லத்தரசியுடன் காதல் அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் உடல் நலம் சீராக இருந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 9