‘நிசப்தம்’ படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியானது

ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்து வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) இந்த டீசர் வெளியாகியுள்ளது.

‘பாகமதி’, ‘சைரா’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தில், வாய் பேசாத காது கேளாத ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.

இந்நிலையில், சஸ்பன்ஸ் ஸ்பை த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

சாக்ஷி என்ற கதாபத்திரத்தில் அனுஷ்கா ஓவியம் வரைவது போன்று போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘இரண்டு’ படத்திற்கு பிறகு ‘நிசப்தம்’ படத்தில் மீண்டும் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். இதில் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.