‘தர்பார்’ மோஷன் போஸ்டர் அசத்தலான இசையுடன் வெளியானது

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் சற்றுமுன்னர் வெளியானது.

இதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலான மோஷன் பொஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளதுடன், ஹிந்தி மொழி போஸ்டரை நடிகர் சல்மான் கானும், மலையாள திரையுலகத்துக்காக நடிகர் மோகன்லாலும் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அசத்தலான இசையில் படத்தின் மோஷன் போஸ்டன் மற்றும் தீம் மியூசிக் வெளியாகி இரசிகர்களை கவர்ந்துவருகிறது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.