அதர்வாவின் ‘வால்மீகி’ திரைப்படத்தின் பாடல் காணொளி

பூமராங், 100 படங்களை தொடர்ந்து நடிகர் அதர்வா தெலுங்கில்  நடித்து வெளியாகிய ‘வால்மீகி’ திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் கடந்த 20ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அதர்வா – மிருணாளினி இடையேயான காதல் பாடல் காணொளியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளது.

இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் மொழியாக்கமாகும்.

தமிழில் சித்தார்த் நடித்த வேடத்தில் அதர்வா நடிக்கிறார். வருண் தேஜ் இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் நடித்துள்ளார்.

மிருணாளினி ரவி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பூஜா ஹெஜிதே இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஹரிஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்கத்தில் 14 ரீல்ஸ் பிளஸ் எல்.எல்.பி. இந்த படத்தை தயாரித்துள்ளனர்.