மேலாடையில்லாமல், பாத் டப்பில் அமலாபால் செய்த அலப்பறை!

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் நடிகை அமலாபால். அடுத்ததாக  ‘அதோ அந்த பறவை போல’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் அவருடைய புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்கில் பதிவேற்றம் செய்துவருகிறார்.

இந்நிலையில், அமலாபால் தற்போது பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.