இன்றைய ராசிபலன் (07.11.2019)

விகாரி ஆண்டு – ஐப்பசி 21 – வியாழக்கிழமை (07.11.2019)
நட்சத்திரம் : சதயம் காலை 11.27 வரை பின்னர் பூரட்டாதி
திதி : தசமி காலை 11.33 வரை பின்னர் ஏகாதசி
யோகம் : மரண – சித்த யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, குடும்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். பெற்றோர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப செலவுகள் வரும். வாகனத்தை மாற்றுவது குறித்த யோசனை வரும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை சற்று தள்ளி போடவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றம் வரும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் மதிப்பு உயரும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, பால்ய நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை விலகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். அனாவசிய செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத மருத்துவ செலவு வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எதிர்பார்த்த முக்கிய விஷயங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெரும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, நெருக்கமானவர்களுக்காக சில வற்றை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். எதிரிகள் விலகி நிற்பர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் அதிக வேலை பார்க்க வேண்டி வரும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு செயல்படுவீர்கள். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, உங்கள் சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.