காரில் பயணித்த ரித்விகாவிற்கு ஓட்டுநரால் ஏற்பட்ட தொல்லை… வைரலாகும் டுவிட்டர் பதிவு

நடிகை ரித்விகா கார் ஓட்டுனர் குறித்து புகார் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2ல் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் தான் ரித்விகா. பிக்பாஸ் வீட்டில் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் வெற்றியினை தட்டிச் சென்றார்.

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஊபர், ஓலா போன்ற கார் சேவை மையங்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இதில் பணிப்பவர்கள் அடிக்கடி ஓட்டுநர்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில், ஊபர் கார் ஓட்டுனர் ஒருவரின் விவரத்தை பதிவிட்டு புகார் அளித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், ஊபர் பாதுகாப்பு இல்லாத பயணம் என்றும் அதில் ஓட்டுநர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றார். அதுமட்டுமின்றி காரின் கண்டிஷனும் மிகவும் மோசமாக இருக்கின்றது என்று, TN07AR4798 என்ற கார் எண்ணையும், காரை ஓட்டி வந்த சாரதியின் விபரத்தினை பதிவிட்டுள்ளார்.