எல்லை மீறிய பாலியல் விளையாட்டு… கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் பிரித்தானிய இளம்பெண் சடலத்தை வக்கிரமாக புகைப்படம் எடுத்த இளைஞர்

சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான நியூசிலாந்து இளைஞரால் பிரித்தானிய இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியரான 22 வயது கிரேஸ் மில்லேன் உலக நாடுகளை சுற்றிப் பார்க்கும் வகையில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இளைஞர்களுக்கான சமூக வலைதளம் ஒன்றில் அறிமுகமான 27 வயது நியூசிலாந்து இளைஞரை சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் ஆக்லாந்து அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து கிரேஸ் மில்லேனின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரேஸ் மில்லேன் உடன் அந்த நியூசிலாந்து இளைஞர் விபரீத பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகும் அளவுக்கு அவரை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார் அந்த இளைஞர்.

மேலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சடலத்தை எவ்வாறு மறைவு செய்வது என்பது தொடர்பில் இணையத்தில் தீவிரமாக தேடியுள்ளார்.

இந்த இடைப்பட்ட வேளையில் அந்த இளைஞர் ஆபாச காணொளிகளை கண்டு களித்துள்ளார். மட்டுமின்றி கிரேஸ் மில்லேன் சடலத்தை வக்கிரமாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தும் ஒரு பெட்டியில் சடலத்தை திணித்து, ஆக்லாந்து அருகே உள்ள வனப்பகுதியில் மறைவு செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டதில், அந்த இளைஞர் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில்,

இருவரும் விரும்பியே உறவில் ஈடுபட்டதாகவும், ஒருகட்டத்தில் மரணமடைந்த இளம்பெண் தமது கழுத்தை லேசாக நெரிக்க வேண்டும் என கூறியதாலையே அந்த இளைஞர் அவ்வாறு செய்ததாகவும், அதில் அந்த இளம்பெண் மரணமடைந்தார் எனவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில், கிரேஸ் மில்லேன் அந்த இளைஞருடன் கை கோர்த்தபடி மிகவும் மகிழ்ச்சியாக நடந்து செல்வதும், இருவரும் முத்தம் வைப்பதும் பதிவாகியுள்ளது.

மட்டுமின்றி இருவரும் ஒன்றாக ஆக்லாந்து பகுதியில் உள்ள மதுபான விடுதிகளில் சென்று வந்துள்ளனர்.

அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைலில், கிரேஸ் மில்லேனின் 7 நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளது.

அது சில மிகவும் வக்கிரமாக இருந்தது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, சம்பவம் நடந்த அன்று, இளம்பெண் கிரேஸ் மில்லேன் நிர்வாணமாக இறந்து கிடந்த நிலையில்,

அந்த இளைஞர் தமது அடுத்த காதலியை சந்திப்பதற்காக சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலத்தை மறைவு செய்வதையும் அந்த இளைஞர் சினிமா பாணியில் மேற்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நாட்களில் தொடரும் என ஆக்லாந்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.