இலங்கையின் வடக்கு, வடமேல் மாகாணம், கொழும்பு பகுதிகளில் காற்று மாசு: அவசர எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளில் வளியில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, மேல், வடமேல் மாகாணங்களில் வளியில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் சுவாச நோய் உள்ளவர்கள் வெளியில் திரியும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியிலுள்ள வளிமண்டலம் நூறு சதவீதம் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பனிமூட்டம் போன்ற காலநிலை தென்படுவதற்கு தூசே காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் டில்லி பகுதியில் ஏற்பட்ட காற்று மாசு பரவியிருக்கலாமென விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு கன மீட்டருக்கு 50 மைக்ரோகிராம் என கடந்து சென்ற காற்றின் துகள்கள் இன்று பிற்பகலுக்குள் 70 மைக்ரோகிராமாக அதிகரித்துள்ளன. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் தூசி மேகம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொழும்பு காற்றின் தர அட்டவணை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது இன்று பிற்பகல் 3.00 மணி நிலவரமாகும்.

நிலைமை குறித்து விவாதிக்க இன்று பிற்பகல் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அர்த்து முகாமைத்துவ நிரையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார். இந்த கலந்துரையாடலுக்காக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.