இன்றைய ராசிபலன் (06.11.2019)

விகாரி ஆண்டு – ஐப்பசி 20 – புதன்கிழமை (06.11.2019)
நட்சத்திரம் : அவிட்டம் காலை 8.58 வரை பின்னர் சதயம்
திதி : நவமி காலை 9.32 வரை பின்னர் தசமி
யோகம்: மரண – சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 3.00 – 4.00

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, உங்கள் திறமையான பேச்சால் பல காரியங்கள் சாதிக் முடியும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும்.உண்டாகும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். எடுத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க வேண்டும் என்ற துணிவு வரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி உங்கள் செயல்கள் இருக்கும். கைகூடாத சில காரியங்கள் நண்பர்கள் உதவியால் கைகூடி வரும். வாகனத்தில் மித வேகம் அவசியம். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தாராள பணப்புழக்கம் கையில் இருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுகமான நிலை காணப்படும். புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்கள் வாழ்க்கை தரம் உயர ஆரம்பிக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு நல்ல மரியாதை இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் சாதகமான நிலை இருக்கும்

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, தியானத்தால் மன நிம்மதி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் அவசியம் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, உறவினர்கள் ஆதரவாக இருப்பர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.