ஆசிரியை ஓடவிட்டு வெளுத்த மாணவர்கள்..! காரணம் என்ன ??

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பால்கரன்பூர் போர் அருகே இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரியரை மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தாக்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பால்கரன்பூரில் இருக்கும் கல்லூரியில் உடல் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது இதில் மாணவிகளின் மீது சில மாணவர்கள் விழுந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

எனவே இந்த சம்பவத்தை கண்ட ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்ட குற்றம் செய்த மாணவர்களை தனியாக அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்து வீடுகளுக்கு சென்று தங்களுடைய உறவினர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து தகராறு செய்துள்ளனர்.

அத்துடன் அந்த ஆசிரியரை ஓட, ஓட விரட்டி தாக்கிய மாணவர்கள் கல்லூரியையும் சூறையாடி இருக்கின்றனர். இதற்கான காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.