டாங்கோ மற்றும் சிலியை உலுக்கிய நிலநடுக்கம்..!

இந்த உலகம் முழுவதும் நிலநடுக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. டெக்டானிக் தட்டுகளுக்கு அருகேயிருக்கும் நாடுகள் அனைத்தும் அவ்வப்போது நிலநடுக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவதுண்டு.

இதனால் பல உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் என தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்., தென்னமெரிக்க நாட்டில் உள்ள சிலியில் இருக்கும் இலாபெல் நகரில் நகருக்கு தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்., இந்த நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டது.

தற்போது வரை சேதங்கள் குறித்த விபரங்கள் ஏதும் தெரியாத நிலையில்., பசுபிக் பெருங்கடலை ஓட்டியுள்ள டாங்கோ பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள நியாபு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.