செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு… கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்த பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஆசையாக வளர்த்த மலைப்பாம்பு அவரது கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது செல்லப்பிள்ளை போல மஞ்சள் நிற மலைப்பாம்புகளையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்து துர்நாற்றம் அடிப்பதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்பு விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் அவதானித்த போது அங்கே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அவரது கழுத்தினை சுற்றிய நிலையில் உயிரிந்து கிடந்துள்ளார்.

பொலிசார் கூறுகையில், போதையில் மயங்கி விழுந்த நிலையில் அவரது கழுத்தினை இறுக்கியிருக்கலாம் என்றும் லாராவின் மரணம் சந்தேகத்தினை எழுப்பியுள்ளது என்றும் கூறியுள்ளார்.