பல நகரங்களில் இடம்பெற்ற 51 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்!

நேற்று சனிக்கிழமை பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராளிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரிசில் மிக குறைந்த போராளிகளால் போராட்டம் வலுவிழந்து காணப்பட்டது. வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. சில நூறு மஞ்சள் மேலங்கி போராளிகள் Place d’Italie இல் இருந்து Gare du Nord வரை பேரணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெரும் படையிலான காவல்துறையினரும் உடன் இருந்தனர். போராளிகள் வழக்கமான கோஷங்களை எழுப்பினர். இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
Bordeaux நகரில் 200 பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக மோசமான கால நிலை காரணமாக தொடர்ச்சியாக மழை கொட்டிக்கொண்டிருந்தது. அதன்போதும் குடைகளை பிடித்தவாறு தங்கள் போராட்டத்தை தொடந்தனர். கடந்தவார ஆர்ப்பாட்டத்தின் போது கண்கணில் காயமடைந்த Jerome Rodrigues எனும் மஞ்சள் மேலங்கி போராளியும் கூட்டத்தினரோடு இணைந்துகொண்டார்.
Rennes நகரிலும் மஞ்சள் மேலங்கி போராளிகள் குவிந்தனர். அங்கும் மிக அமைதியாக ஆர்ப்பாட்டம் இடம்பெறது.
 17:00 மணி வரை எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும், எவரும் கைது செய்யப்பட்டவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.