தமிழகத்தில் இரவு உணவை சாப்பிட்டு படுத்த குழந்தை!… காலையில் சடலமாக மீட்பு.

தமிழகத்தின் தருமபுரியில் இரவு உணவை சாப்பிட்டு படுத்த குழந்தை காலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ராமகவுண்டஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு 2 வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை இருந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மித்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கடந்த 1ம் திகதி இரவு வீட்டுக்கு குழந்தையை கொண்டு வந்தனர்.

அன்றிரவு உணவை கொடுத்துவிட்டு மருந்து, மாத்திரைகள் கொடுத்து குழந்தையை தூங்க வைத்துள்ளனர்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, மித்ரா மூச்சு பேச்சின்றி சடலமாக கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற போது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இரவில் கடும் காய்ச்சல் ஏற்பட்டதே குழந்தையின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.