தமிழகத்துக்கு 580 கோடியை ஒதுக்கிய ஜெர்மனி பிரதமர்.!

தமிழகத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாய் ஜெர்மனி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், நேற்று டெல்லியில் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புறங்களின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

மேலும், பசுமைப் போக்குவரத்திற்காக ஜெர்மனி அரசு 1 பில்லியன் டாலர்கள் தொகை இந்தியாவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்குவதற்காக 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணர்ந்தவர்கள், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என ஜெர்மனி பிரதமர் தெரிவித்தார்.