உயிரை பறிக்கும் கனடா ஆப்பிள்! மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள்.

ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது.

ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன. அதில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும், அதன் நன்மைகள் கிடைக்கும். பொதுவாக இரவில் தூங்கும் முன்பு எதையேனும் சாப்பிட்டால், அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, நாள் முழுவதும் விழித்திருக்க செய்துவிடும்.

இம்மாதிரியான நிலைமை காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான். அப்படியெனில் ஆப்பிளை சாப்பிடுவது நல்லதா என்றால், நிச்சயம் ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள்.

இத்தகைய சிறப்பு கொண்ட ஆப்பிள் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காட்சி காத்திருக்கின்றது. கனடாவில் விற்பனையாகும் அப்பிள் பழத்தின் மீது மெழுகு பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பிள் சாப்பிடுபவர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களே இனி நீங்கள் சாப்பிடும் ஆப்பிள் ஆரோக்கியமானதா என்று பரிசோதித்து அதன் பின்னர் சாப்பிடுங்கள். இல்லை உயிரை பறிக்கு ஆபத்துக்கள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.