உடலில் தங்கியுள்ள கொடிய நச்சுக்களை அடித்து விரட்டும் சக்தி வாய்ந்த உணவுகள் என்னென்ன தெரியுமா?

அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது.

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி விட வேண்டும்.

நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் மூலமே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றலாம். அதனை முழுமையாக அறிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். கைக்குத்தல் அரிசி எடுத்துக் கொள்வது சிறந்தது. பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.

க்ரீன் டீ

தினமும் ஒரு கப் க்ரீன் டீ பருகி வந்தால், கல்லீரலை நன்றாகப் பாதுகாத்து சுத்தம் செய்யலாம்.

வைட்டமின் சி உணவுகள்

நமது உடலிலிருந்து டாக்ஸின்களை விரட்டியடிக்க உதவும் கல்லீரலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருளான குளுடாத்தியோன் (glutathione) எனப்படும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற்கு உதவுகின்ற வைட்டமின் சி உள்ள உணவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளூங்கள்.

தண்ணீர் பருகவும்

ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துங்கள்.

சுடுநீர் குளியல்

நல்ல சூடான வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் குளிப்பதன் மூலம் வெந்நீர் குளியல் எனப்படும் ஹைட்ரோதெரபியை (hydrotherapy) செய்து வாருங்கள். மேலும் வெந்நீரானது முதுகில் நன்கு படவேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரானது 30 வினாடிகள் முதுகில் ஓட வேண்டும். இது போல மூன்று முறை மாற்றி மாற்றி செய்யுங்கள். அதன் பின் 30 நிமிடங்கள் படுக்கையில் படுத்திருங்கள்.

எலுமிச்சை ஜூஸ்

தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, தேன் சேர்த்து கலந்து குடித்து வர, நச்சுக்கள் உடலில் சேர்வது தடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.