18 வயதிலே திருமணத்திற்கு தயாரான நட்சத்திர பந்துவீச்சாளர்

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் பந்துவீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணிக்கெதிராக விளையாடியபோது வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன்மூலம் பிரபலமடைந்த அவர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமானார்.

புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசும் திறன்கொண்ட சுழற்பந்துவீச்சாளர் முஜீப், உலகெங்கிலும் உள்ள நட்சத்திர மட்டையாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார்.

முஜீப் தற்போது வரை தன்னுடைய நாட்டிற்காக 37 ஒருநாள் போட்டிகள் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் எம். இப்ராஹிம் மொமண்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இளம் வீரர் முஜீப் உர் ரஹ்மான், திங்கள்கிழமை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அவருடைய புதிய வாழ்க்கைக்கு வாழ்த்தும் கூறியுள்ளார்.