ரஷ்மிகாவுடன் காதலா?: உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா!

தெலுங்கில் தொடர்ச்சியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா. இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவுகின்றன. ஆனால் விஜய் தேவரகொண்டா மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛நானும், ரஷ்மிகாவும் காதலிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. நாங்கள் காதலிப்பதெல்லாம் சினிமாவில் மட்டும் தான். எனக்கேற்ற பெண்ணை தேடி வருகிறேன். கிடைத்ததும் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

தற்போது, ‘வேல்டு பேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, அடுத்த ஆண்டு பூரி ஜெகந்நாத் இயக்கும் பைட்டர் என்ற படத்தில் நடிக்கிறார்.