உடல்நல பாதிப்புகள் இருப்பதல் காஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதற்கான தடையை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு காஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதற்கான தடையை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகள் இருப்பதற்கான ஆதாரங்களை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் கொண்டுள்ள நிலையிலேயே, இந்த விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

மருத்துவக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் ரேடியோ-கனடாவின் புலனாய்வுத் திட்டமான என்குவேட் ஆகியவற்றின் அறிக்கையின் மத்தியில், கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் இந்த விடயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இதுகுறித்து கியூபெக்கின் விளையாட்டு மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா ப்வெங்கே கூறுகையில்,

“இது குழந்தைகள் அல்லது பதின்ம வயதினரால் குடிக்கக் கூடாத ஒரு தயாரிப்பு. அவர்கள் தான் அதிகம் குடிப்பவர்கள். தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அவர்கள் அதிகம் உணருகிறார்கள். மேலும், அவர்கள் இதை அடிக்கடி விளையாட்டு நடவடிக்கைகளின் பின்னணியில் குடிக்கிறார்கள்” என கூறினார்.