தோனியை விமர்சிப்பவர்களை லெப்ட் ரையிட் வாங்கிய ரவிசாஸ்திரி.!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது நிருபர் ஒருவர் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சனம் செய்கிறார்களே?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ரவிசாஸ்திரி கூறியதாவது:-

தோனி குறித்து பேசுபவர்களில் பாதி நபர்களுக்கு அவர்களது ஷூவின் லேஸ் கூட கட்டத் தெரியாது. இந்திய அணிக்காக
தோனி செய்துள்ள சாதனையை பாருங்கள். தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக விலக வேண்டும் என மக்கள் ஏன் அவசரப்படுகிறார்கள்? என தெரியவில்லை. அப்படி சொல்பவர்களுக்கு பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாமல் இருக்கலாம்.

முன்னாள் கேப்டன் தோனி விரைவில் கிரிக்கெட்டிலிருந்து அவரே விடைபெறுவர் என்பதை அவர் உள்பட எல்லோரும் அறிந்ததே. அவரது ஓய்வு எப்போது நடக்குமோ அப்போது நடக்கட்டும். அதை பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பது தவறு, இது போன்ற செயல்கள் அவரை அவமதிக்கும் செயலாகும்.

இந்திய அணிக்காக தோனி 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இத்தனை ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய அவருக்கு ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்பது தெரியாதா? 5 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி என்ன சொன்னார். விக்கெட் கீப்பிங் பணியை விருத்திமான் சஹாவிடம் வழங்கும் அளவுக்கு நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். அவரது கணிப்பும் சரியாகவே  இருந்துள்ளது.

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போட்டியின் போது இந்தோனியா வீரர்களின் ஓய்வறைக்கு வந்த தோனி, உள்ளூர் வீரர் ஷபாஸ் நதீமை சந்தித்து அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசி விட்டு சென்றார்.

தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை டோனிக்கு உண்டு. இனிமேல் அவரது ஓய்வு பற்றிய இத்தகைய விவாதங்கள் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும் என்றார்.