தமது ஆட்சியில் பிள்ளையானிற்கு விரைவில் விடுதலை; மேடையில் அறிவித்தார் மஹிந்த; ‘ஓ’ போட்டனர் ஆதரவாளர்கள்!

கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமது ஆட்சியில் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

நேற்று (26) மட்டக்களப்பு பேத்தாளையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

மேடையில் உரையாற்றிய பின்னர் புறப்பட தயாரான மகிந்த ராஜபக்ச, மீண்டும் ஒலிவாங்கிக்கு அருகில் வந்து, தமது ஆட்சியில் பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என்றார். இந்த கூட்டம் முடிந்ததும், அவரை சிறைச்சாலைக்கு சென்று பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த கூட்டத்தின் தொடக்கத்தில், சினிமா நடிகர், நடிகைகள் பாணியில், பிள்ளையானிற்கு ஓ போடுங்கள் என அறிவிக்க, ஆதரவாளர்கள் ஓ போட்ட வேடிக்கையான சம்பவமும் நடந்தது.