அடையாளம் காண முடியாத அளவு சிதைக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்!

நெடுஞ்சாலை ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவரது சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சின் வடக்கு பிராந்தியத்தை ஊடறுக்கும் A15 நெடுஞ்சாலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3:45 மணிக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பரிசை நோக்கி வரும் A15 நெடுஞ்சாலையின் ஓரத்தில் இளம் பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அடையாளம் எதுவும் காண முடியாதபடி சடலம் சிதைவடைந்திருந்ததாகவும், 13-15 வயதுக்குபட்ட பெண்ணாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.