பிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் பற்றி வெளியான முக்கிய தகவல்

பிரித்தானியாவில் லொரியின் கண்டெய்னரில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், அதில் 31 பேர் ஆண்கள் 8 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Essex நகரின் Greys பகுதியில் அமைந்திருக்கும் Waterglade Industrial Park அருகே பொலிசார் லொரி கண்டெய்னர் ஒன்றை நடத்திய சோதனையில், லொரியில் 39 சடலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு பொலிசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு Mo Robinson-யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், கண்டுபிடிக்கப்பட்ட 39 சடலங்களில் 11 பேரின் உடல்கள் துறைமுகம் Tilbury-யிலிருந்து தனியாக Chelmsford-வில் இருக்கும் Broomfield மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின் இது தொடர்பான விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட 39 உடல்களில் 8 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கை செய்யப்பட்டுள்ள Mo Robinson-ஐ பற்றி அவருடைய நண்பர்கள், அவன் மிகவும் நல்லவன், அவன் தான் இப்படி செய்தான் என்று கூறினால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

அதே போன்று அவரின் பெற்றோரு அவன் ஒரு அப்பாவி, இந்த சம்பவத்திற்கு அவனுக்கும் சம்பந்தம் இருக்காது என்று கூறி வருவதால், என்ன நடந்திருக்கும் என்பது அடுத்தடுத்த விசாரணையிலே தெரியவரும்.