தமிழர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பெற்ற உணவு பொருள் எது தெரியுமா?ஆராய்ச்சியின் முடிவு

வெங்காயம் தமிழர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க கூடிய ஒரு பொருள்.

இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி, ஃபிளவனாய்டுகள் மற்றும் பைட்டோனுயூட்ரின்கள் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாகிறது.

வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்
  • இதய நோய் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக திகழ்வது வெள்ளை வெங்காயத்தில் ஆரோக்கியமான நன்மைகளில் ஒன்றாகும்.
  • இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த உறைதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • வெங்காயம் மற்றும் மஞ்சள் ஒன்றோடு ஒன்று கலப்பதால் கிடைக்கும் இரசாயனம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
  • பொதுவாகவே இது எல்லா வகையான புற்றுநோய் ஆபத்தையும் தடுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
  • வெள்ளை வெங்காயத்தில் உள்ள அதிகளவு சல்பர் மிகச்சிறந்த எதிர்ப்பு அழற்சி பொருளாகும். இது உங்கள் இரத்தத்தில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் உதவும்.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதில் வெள்ளை வெங்காயம் முக்கியபங்கு வகிக்கிறது.
  • வெங்காயத்தை கருவுறுதலுக்கும், ஆண்மையை அதிகரிப்பதற்கும் பழங்காலம் முதலே நம் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுதும் வெள்ளை வெங்காயம் மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.