கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் பதற்றம் நீடிக்கின்றது – யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கண்டியில் பதற்றம் நீடிக்கின்றது – யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் இன்று இரவு ஏற்பட்ட பதற்றத்தில் யுவதி ஒருவர் காயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிங்கள யுவதியின் கையை சந்தேக நபரான முஸ்லிம் இளைஞன் காயப்படுத்தியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் மஹய்யாவ பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை மஹய்யாவ பகுதியில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக வெளியான தகவலை அடுத்து முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கண்டியில் பதற்றம்: பெருமளவு பொலிஸார் குவிப்பு

கண்டி மஹய்யாவ நகரில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்கள யுவதி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதை அடுத்தே இன்று இரவு பதற்றம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்

தற்சமயம் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.