15 ஆண்டுகள் பிறகு கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்.!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், 2003-ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ள அடுத்த படத்தை அவரது கணவர் கிருஷ்ணா வம்சி இயக்க உள்ளார். ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்திரலேகா, ஸ்ரீ ஆஞ்சநேயம் ஆகிய படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார். தற்போது 15 ஆண்டுகள் பிறகு ‘வந்தே மாதரம்’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளார்.