மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கும் ஜாம்பவான்கள்!

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் சாலை பாதுகாப்பு உலகத் தொடருக்கான போட்டியில் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் பிரையன் லாரா களமிறங்க உள்ளனர்.

அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஆண்டுதோறும் இருபது ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 2 முதல் 16 வரை இந்தியா முழுவதும் நடைபெறும் போட்டிகளுக்காக, சச்சின் மற்றும் லாராவுடன் முன்னாள் வீரர்களான இந்தியாவின் வீரேந்தர் சேவாக், அவுஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் திலகரத்ன தில்ஷன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் இணைகிறார்கள்.

46 வயதான சச்சின், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே அதிக ரன்களை சேர்த்தவர் என்கிற பெருமையினை பெற்றுள்ளார். 2013 இல் முடிவடைந்த அவருடைய 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 34,000 ரன்களையும் 100 சதங்களையும் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.