மலேசியாவில் இருக்கும் ஈழத்தமிழருக்கு முக்கிய அறிவிப்பு!

மலேசியாவில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட திட்டங்களை மீறியவர்கள் நாடு திரும்புவதற்காக பொது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்ட திட்டங்களை மீறியவர்கள் நாடு திரும்புவதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் உறவினர்கள் சட்ட விரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதாக மேற்குறிப்பிடப்பட்ட காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.