மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உடற்பயிற்சிகள்.!

ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போதுஇ அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால்இ இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால்இ அது மன அழுத்தமாக மாறிவிடும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உடற்பயிற்சிகள்:

தியானம் யோகா போன்றவற்றில் மனதை டுபடுத்த வேண்டும்.

ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று.

மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது. மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

புருவங்களின் மத்தியில் அழுத்தம் தரலாம்.

பின் கழுத்தில் அழுத்தம் தரலாம்.

நடைப்பயிற்சி நலம் தரும்.

கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தரலாம்.