சகோதரி தற்கொலை செய்துகொண்ட ஆத்திரத்தில் அவருடைய கணவரின் கழுத்தை அறுத்துக்கொன்ற தம்பி!

சகோதரி தற்கொலை செய்துகொண்ட ஆத்திரத்தில் அவருடைய கணவரை, சொந்த தம்பியே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் கோலேகர் (25) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோமல் (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருமே வீட்டிற்கு பிடிக்காமல் தான் திருமணம் செய்திருக்கின்றனர்.

ஆனால் அடுத்த சில நாட்களிலே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோமல் சனிக்கிழமை இரவு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்துள்ளனர். அந்த சமயம் கோமல் குடும்பத்தினரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வந்தடைந்துள்ளனர்.

அப்போது ஆகாஷிடம் தனியாக பேச வேண்டும் என கோமலின் சகோதரன் ரவீந்திர காலேட் (25) அனுமதி கேட்டுள்ளார். அதற்கு பொலிஸாரும் அனுமதி கொடுத்த சமயத்தில், அவர்களின் கண்முன்னே ஆகாஷின் கழுத்தை ரவீந்திர காலேட் அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ரவீந்திர காலேட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.