கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…!!!

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருபவருமான ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் அடுத்தடுத்து வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,

அவுஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டராக பட்டையை கிளப்பியவர் ஷேன் வாட்சன். அதன் பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் உள்ளூர் தொடர்கள் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

அதன் படி இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும், இவர் கடந்த ஆண்டு காலில் காயம் ஏற்பட்டும், இரத்த காயத்தோடு விளையாடியதால், தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இதனால் இவருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தது. இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை கூடியது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வாட்சனின் டுவிட்டர் அக்கவுண்ட்டில் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில நாட்களிலேயே அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டவிரோத புகைப்படங்களுக்கு மன்னிப்பு தெரிவித்து கொள்கிறேன். முதலில் எனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. தற்போது எனது இன்ஸ்கிராம் பக்கம். இதுபோன்ற நிகழ்வுகளின் போது இன்ஸ்டாகிராம் நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.