இந்திய கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் பதிலடி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மிதாலி ராஜ், தன்னுடைய தாய்மொழி குறித்து பேசிய நபருக்கு ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 1999-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார்

கடந்த சில தினங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியை நிறைவு செய்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 20 ஆண்டு பயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்தார்.

அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் பலரும் இணையத்தில் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அதில் ஒரு இளைஞர், “வாழ்த்துக்கள் தமிழச்சி” என பதிவிட்டிருந்தார். அதற்கு சுகு என்கிற நபர், “அவருக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மட்டும் பேசுவார்” என பதில் கொடுத்திருந்தார்.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த மிதாலி, “தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்..தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் இந்தியனாக மிகவும் பெருமைப்படுகிறேன்.”

“என் அன்பான சுகுவே, என்னுடைய ஒவ்வொரு இடுகையிலும் நீங்கள் தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள். நான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உங்களுடைய அன்றாட ஆலோசனை என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என பதிலடி கொடுத்துள்ளார்.