வேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…!!!

பிக்பாஸின் மூலமாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்த மக்களின் மனதைக் கொள்ளை கொண்டதுடன், வெற்றிக் கோப்பையினையும் தட்டிச் சென்றவர் தான் முகேன்.

மலேசியா கோலாலம்பூரைச் சேர்ந்த இவர் பல திறமைகளைக் கொண்டிருந்தார். இவரை சக போட்டியாளரான உள்ளே சென்ற அபிராமி விரட்டி விரட்டி காதலித்தார்.

ஆனால் முகேன் வெளியில் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிய அபிராமியிடம் நண்பராகவே பழகிவந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த பின்னர் தனது வாழ்த்துக்களைக் கூறினார் வெளியில் இருந்த காதலி யாஸ்மின் நாடியா.

தற்போது வெற்றிக்கோப்பையுடன் முகேன் தனது தாயகமான மலேசியா திரும்பியதோடு, அங்கு ரசிகர்களுடனும், நண்பர்களுடனும், காதலி யாஸ்மின் உடனும் இருந்ததை காணொளியாக அவதானித்தோம்.

இந்நிலையில் முகேனின் காதலி யாஸ்மின் நாடிய வேறொரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. குறித்த புகைப்படத்தில் இருப்பவர் புவிதரன் என்று கூறப்படும் நிலையில் முகேனுக்கு இந்த விடயம் தெரிந்தால் அவரது ரியாக்ஷன் என்ன? கோபத்தில் என்ன செய்வார்? அவரது பதில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிக்கொண்டு வருகின்றனர்.