திருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக திருமணமான ஆசிரியர் ஒருவர் குட்டையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகின்றார் வேதபிரகாஷ். இவருக்கு கடந்த மாதம் 7ம் திகதி அங்கிதா(25) என்ற தனியார் பள்ளி ஆசிரியைக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

வாடகை வீடு எடுத்து இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் அங்கிதாவை கடந்த 7ம் திகதி முதல் காணவில்லை என்பதால் கணவர் பதட்டத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகரிலிருந்து 50 கிலோமீற்றர் தூரத்திலிருந்த குட்டை ஒன்றில் டீச்சரின் சடலம் மிதப்பதை கண்டறிந்தனர்.

சடலத்தினை அவதானித்த பொலிசார் அதனை மீட்ட போது, அது அழுகிய நிலையில் காணப்பட்டதால் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அங்கிதாவின் வீட்டில் கடிதம் ஒன்றினை கைப்பற்றியதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நிகழ்வு கொலையா அல்லது தற்கொலையா என்று பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.