யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் மாயம்!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த அம்பலவாணர் வீதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஜனுக்சன் எனும் 16 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயிலும் மாணவனே இவ்வாறு காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக நேற்றுமுன்தினம் முற்பகல் வீட்டிலிருந்து மருந்து எடுப்பதற்காகச் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன் நேற்றுமுன்தினம் காலை பாடசாலைக்குச் சென்ற நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை உடனேயே வீடு திரும்பிய நிலையில், மருந்து வாங்க சென்றபோதே காணாமல் போயுள்ளார்.

இதேவேளை குறித்த மாணவனின் தாயார் சமுர்த்தி உத்தியோகத்தராக உடுவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.