மலேசியாவில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் நேற்று 5 பேர் கைது!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக நம்பப்படும் மேலும் ஐவர் இன்று (12) கைது செய்யப்பட்டனர். மலாக்காவில் இருவரும் பினாங்கில் இருவரும் சிலாங்கூரில் ஒருவரும் கைது செய்யப்பட்டதைப் பொலிசார் உறுதிபடுத்தினர்.

பினாங்கு புக்கிட் மெர்தாஜாம், புக்கிட் மின்யாக்கைச் சேர்ந்த 25 வயதுடைய தனராஜ் சிவம் கைதுசெய்யப்பட்டார் என உறுதிப்படுத்தப்பட்டது. கடை உதவியாளராக வேலை செய்து வரும்
தன்ராஜ் சிவம் அரச சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர் ‌‌‌‌‌‌ஆவார். தனராஜ் சிவம் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நம்பப்படும் 12 பேர் இதுவரை சொஸ்மா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினர்களான குணசேகரன் மற்றும் சாமிநாதன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் விசாரணையின்றி 28 நாட்கள் தடுத்து வைக்கப்படிருப்பார்கள் என புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் அயூப் கான் தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் பொருட்டு மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறினார்.