மற்ற பழத்தை விட வாழைப்பழத்தில் இருக்கும் நன்மை .!

வாழைப்பழத்தில் இயல்பாகவே நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன், பச்சை வாழைப்பழத்தில் மாவுச்சத்துக்கு எதிரான தன்மை இருக்கிறது.

இந்தப் பழத்தில் மற்ற பழங்களைவிட கலோரி அதிகமாக இருந்தாலும், அதில் இருக்கும் தனித்துவமான அம்சங்கள் உடனடியாக வயிற்றை நிரப்பும் பழமாக ஆக்குகிறது.

இவற்றில் பொட்டாசியம், வைட்டமின்-பி6 என்ற இரண்டு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஓட்டப்பந்தய வீரர்களின் விளையாட்டு பானத்தில் நிரம்பியிருக்கும் ஊட்டச்சத்துகள் வாழைப்பழத்தில் இருக்கின்றன.

அதனால், அது சற்று தாமதமான செரிமானத்தை அடைகிறது. இந்தத் தன்மை, கொழுப்பாக மாறாமல் உங்கள் வயிற்றை நிரப்புகிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

உடலின் ஆற்றலை உடனடியாக மீட்டெடுப்பதில் வாழைப்பழங்கள் சிறந்தவை.