பிரபலங்களின் பாராட்டு மழையில் பிகில் ட்ரைலர்.. தெறிக்குது ட்விட்டர்

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. தீபாவளி ரிலீஸ் நோக்கி படக்குழு இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பிகில் ட்ரெண்டிங்கில் தான் உள்ளது.

இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி வைரல் ஹிட் அடித்துள்ளது. சாமானிய ரசிகன் என்பதனை கடந்து, சினிமா பிரபலங்களும் வியந்து பாராட்டும் படி தரமான சம்பவமாக அமைந்துவிட்டது ட்ரைலர்.

இந்த ட்ரைலரை கோலிவுட்டில் பல நடிகர், நடிகையர், இயக்குனர் பாராட்டி உள்ளனர் ..

பாலிவுட்டின் பாஷா ஷாருக்கான் மற்றும் ஸ்டார் இயக்குனர் கரண் ஜோஹரும் இந்த ட்ரைலரை பகிர்ந்துள்ளார்கள்..

Wish my friends @Atlee_dir & #ThalapathyVijay & @arrahman all the best for this one. Like a Chake De On steroids!! https://t.co/pzvpQ3Imko

இதோடு முடிந்ததா என பார்த்தால் ஹாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பில் ட்யூக் அமெரிக்கா ப்ரீமியர் ஷோ எப்போ என அட்லீயிடம் கேட்டுள்ளார் …